வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2022 (16:51 IST)

தமிழ் உள்பட 13 மொழிகளில் நுழைவுத்தேர்வு: யுஜிசி அறிவிப்பு!

தமிழ் உள்பட 13 மொழிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறும் என யூஜிசி அறிவித்துள்ளது. 
 
பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும், தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வின் மூலம் தான் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் ஏற்கனவே யுஜிசி தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில் தற்போது மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வு தமிழ் ஆங்கிலம் இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.