வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (16:35 IST)

மகன் காதலியுடன் ஓட்டம் : தாயாரை நிர்வாணப்படுத்தி கொடுமை

இளம்பெண்ணை காதலித்து, அவரை கூட்டிக் கொண்டு ஓடி விட்டதால், கோபமடைந்த பெண் வீட்டார், அந்த ஆணின் தாயை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரி மாவட்டத்தை சேர்ந்த கோத்வாலி கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபர், அதே கிராமத்தில் வசிக்கும் பெண்ணை காதலித்துள்ளார். அவர்களின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டார்கள் என்று கருதிய அவர்கள் சமீபத்தில் அந்த கிராமத்திலிருந்து ஓடி விட்டனர். 
 
இதனால் கோபமடைந்த பெண் வீட்டார்கள், அந்த வாலிபரின் 60 வயது தாயை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ளனர். அவரின் உடல் முழுவதும் கரி பூசி அசிங்கப்படுத்தியுள்ளனர். அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத அவர்கள், அவரின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவி கொடுமை செய்துள்ளனர்.
 
இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுக்கப்படட்து. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான ஐந்து பேரை அவர்கள் தேடி வருகிறார்கள்.