1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (08:20 IST)

கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை: அதிரடி அறிவிப்பு!

கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை: அதிரடி அறிவிப்பு!
கார்களில் தனியாக செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என டெல்லி அரசு அதிரடியாக அறிவித்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
டெல்லியில் நாளை முதல் காரில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
காரில் தனியாக செல்பவர்களின் முக கவசம் அணிய வேண்டும் என்ற நிபந்தனை தேவை இல்லாதது என்று டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் டெல்லி அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது. 
 
இந்த அறிவுறுத்தலை அடுத்து தற்போது டெல்லி சுகாதாரத்துறை காரில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது