வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (07:36 IST)

வருமான வரி தாக்கலுக்கு புதிய இணையதளம்: அதிகாரிகள் தகவல்

வருமான வரி கட்டுபவர்கள் தற்போது என்ற www.incometaxindiaefiling.gov.in இணையதளத்தை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது வருமான வரி தாக்கலுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் www.incometaxgov.in என்ற புதிய இணையதளத்தை வருமான வரித்துறை தாக்கல் செய்பவர்கள் பயனப்டுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய இணையதளம் ஜூன் 7-ஆம் தேதி முதல் அதாவது நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், பொதுமக்கள் இந்த இணையதளத்தின் மூலம் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: வருமான வரி தாக்கலுக்கான புதிய இணையதளத்தை வருமானவரித்துறை தொடங்கியுள்ளது. வருமானவரி தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒற்றைச்சாளர முறையில் வழங்குவதே இந்த இணையதளத்தின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.