SIR நடவடிக்கையின் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா 60 வயது பெண்.. பிண அரசியல் என பாஜக விமர்சனம்..!
மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீரமைப்பு (SIR) பணியால் ஏற்பட்ட பீதியினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
60 வயதான ஹசீனா பேகம் என்ற பெண், 2002 வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. SIR பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வங்காளதேசத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்ற பா.ஜ.க. தலைவர்களின் கருத்துகளே இந்த பீதிக்கு காரணம் என்று திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பா.ஜ.க. பதிலளிக்கையில், திரிணமூல் காங்கிரஸ் பொய்களை பரப்புவதாகவும், 'பிண அரசியலில்' ஈடுபடுவதாகவும் சாடியுள்ளது. SIR என்பது ஒரு சாதாரண தேர்தல் செயல்முறை என்றும், நாட்டில் என்.ஆர்.சி. திட்டம் எதுவும் இல்லை என்றும் பா.ஜ.க. மறுத்துள்ளது.
இந்த விவகாரம், கடந்த ஒரு வாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் எழுப்பும் மூன்றாவது குற்றச்சாட்டு ஆகும். இது மேற்கு வங்க அரசியலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் புள்ளியாக மாறியுள்ளது.
Edited by Siva