ஆசையாய் முத்தம் கொடுத்த மனைவி : நாக்கை அறுத்த கணவன்!

gujarath
sinojkiyan| Last Updated: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (19:21 IST)
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் ஒரு பெண் தனது கணவருக்கு ஃபிரெஞ்ச் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது கணவர் மனைவியின் நாக்கைக் அறுத்த   சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வசித்து வருபவர் தஸ்லீம் அன்சாரி. இவரது கணவர் வேலைக்குச் செல்லால வெட்டியாக ஊரைச் சுற்றி வந்துள்ளார். அதனால் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அடிக்கடி எழுந்து, அது சண்டையாக மாறிவிடும்.
 
இந்நிலையில் சமீபத்தில் இதேபோன்று இருவருக்கும் இடையே சண்டை எழுந்துள்ளது. அதன்பிறகு வெளியெ சென்ற கணவன் வீட்டுக்கு வந்ததும் அவரிடம் பிரெஞ்சு முத்தம் வேண்டுமென கேட்டுள்ளார் தஸ்லீம் அன்சாரி. 
 
பின்னர், கணவர், அவருக்கு முத்தம் கொடுக்கும்போது, அவரது நாக்கைப் பிடித்துக் கையில் இருந்த கத்தியால் அறுத்துள்ளார்.இதனால் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் தஸ்லீமா சுருண்டு கீழே விழுந்து வலியால் அலறியுள்ளார்.
 
இந்த சப்தம் கேட்டு வந்த  அருகில் உள்ளவர்கள் தஸ்லீமாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். 
 
இதுகுறித்து போலீஸார், தஸ்லீமாவின் கணவரிடம்  தீவிரமாக விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :