திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (13:36 IST)

காப்பாற்ற சென்றவரும் பலாத்காரம் செய்த கொடூரம்: 15 வயது சிறுமியின் பரிதாபம்!

காப்பாற்ற சென்றவரும் பலாத்காரம் செய்த கொடூரம்: 15 வயது சிறுமியின் பரிதாபம்!

லக்னோவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
லக்னோ சரோஜினி நகரை சேர்ந்த 15 வயது சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்த சுமித் மற்றும் சுப்பம் என்னும் இரண்டு இளைஞர்கள் கொடுரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க தன்னை காப்பாற்றுமாறு அந்த சிறுமி சத்தமிட்டுள்ளார்.
 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வீரேந்திரா என்ற நபர் வந்துள்ளார். ஆனால் கொடூரம் காப்பாற்ற வந்த வீரேந்திராவும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.
 
பலாத்கார குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் முதலில் சிறுமியை பலாத்காரம் செய்த சுமித் மற்றும் சுப்பம் ஆகியோரை கைது செய்துள்ளனர். வீரேந்திராவை தீவிரமாக தேடி வருகின்றனர்.