புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (09:27 IST)

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் வாகங்களுக்கு இலவச டீசல்!

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் வாகங்களுக்கு இலவச டீசல்!
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப் அரியானா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
டெல்லியே குலுங்கும் அளவிற்கு நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்களும் தனியார் அமைப்புகளும் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் விவசாயிகளுக்கு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் வாகனங்களுக்கு டெல்லி-அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் இலவச டீசல் வழங்கப்பட்டு வருகிறது. சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த டீசலை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது