வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (05:19 IST)

இந்தியா முழுவதற்கும் இலவச ஆன்டி-வைரஸ் சேவை. மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா முழுவதும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் சாதனங்களுக்கு இலவசமாக ஆன்டி-வைரஸ் மென்பொருள் வழங்கும் திட்டம் ஒன்றை மத்திய மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுளது.



மத்திய அரசு சார்பில் இந்தியா முழுக்க கணினி மற்றும் மொபைல் போன்களுக்கு இலவசமாக ஆன்டி-வைரஸ் மென்பொருள் வழங்க பாட்நெட் கிளீனிங் மற்றும் ஆன்டி-மால்வேர் ஆய்வு மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலம் ஸ்மார்ட் சாதனங்களில் இருக்கும் வைரஸ் மற்றும் மால்வேர்களை கண்டறிய முடியும்.

இந்த சேவை குறித்து இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் விவரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்களது கணினி அல்லது ஸ்மார்ட் சாதனங்களில் ஏதேனும் மால்வேர் கோளாறு ஏற்படும் போது இந்த இலவச சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவி சங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் டிராக் செய்யப்பட்டு அந்த கம்ப்யூட்டர்களின் ஐ.பி முகவரி இண்டர்நெட் சேவை வழங்குவோருக்கு அனுப்பப்படும் என்றும் இண்டர்நெட் சேவை வழங்குவோர் இந்த ஐ.பிக்களை கண்டறிந்து மையத்திற்கு செல்லும் லின்க்கினை வழங்குவார்கள் என்றும் இந்த பணியில் இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஒன்று வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

90 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தால் வாடிக்கையாளர்கள் ஆன்டி-வைரஸ் அல்லது ஆன்டி-மால்வேர் மென்பொருள்களை டவுன்லோடு செய்து கொள்ள முடியும் என்றும் முதல்கட்டமாக 58 இண்டர்நெட் சேவை வழங்குவோர் மற்றும் 13 வங்கிகள் இந்த அமைப்பை பயன்படுத்தி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.