1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (07:52 IST)

4 வது சிறுத்தையும் சிக்கியது.. திருப்பதி செல்லும் பக்தர்கள் நிம்மதி..!

Leopard
திருப்பதி மலைப் பாதையில் ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில் தற்போது நான்காவது சிறுத்தையும் பிடிபட்டுள்ளதால் திருப்பதி மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் 
 
திருப்பதியில் நடைப்பாதையில் சிறுத்தைகள் நடமாடியதாக பக்தர்கள் கூறிய நிலையில் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்று கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து திருப்பதி மலைப் பாதையில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகளை அமைத்தனர். இந்த கூண்டில் ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் சிக்கிய நிலையில் இன்று அதிகாலை நான்காவது சிறுத்தையும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இன்று அதிகாலை பிடிபட்ட சிறுத்தையை உயிரியியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பதி மலை பாதையில் நடமாடி கொண்டிருந்த நான்கு சிறுத்தைகளும் பிடிபட்டதை அடுத்து அந்த பகுதி வழியாக செல்லும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Siva