திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 செப்டம்பர் 2018 (12:59 IST)

பிரபல நடிகரின் பிணத்துடன் செல்பி: நான்கு நர்ஸ்கள் டிஸ்மிஸ்

உலகம் முழுவதும் தற்போது செல்பி மோகம் தலைவிரித்து ஆடி வருகிறது. கவனக்குறைவான செல்பியால் பல உயிர்கள் தினந்தோறும் பலியாகி வரும் நிலையில் ஆந்திராவில் செல்பியால் 4 நர்ஸ்களின் வேலை பறிபோயுள்ளது

சமீபத்தில் பிரபல நடிகர் ஹரிகிருஷ்ணா சாலை விபத்து ஒன்றில் அகால மரணம் அடைந்தார் என்பது தெரிந்ததே. அவருடைய மரணத்திற்கு பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த நான்கு நர்ஸ்கள் ஹரிகிருஷ்னாவின் பிணத்துடன் செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.
 
பிணத்துடன் செல்பியா? என்று பலர் அந்த நர்ஸ்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து ஹரிகிருஷ்ணாவின் குடும்பத்தினர்களும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அந்த மருத்துவமனையின் நிர்வாகம், ஹரிகிருஷ்ணாவின் பிணத்துடன் செல்பி எடுத்த நான்கு நர்ஸ்களையும் டிஸ்மிஸ் செய்ததுடன், ஹரிகிருஷ்ணாவின் குடும்பத்தினர்களிடம் மன்னிப்பும் தெரிவித்தனர்.