திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (16:14 IST)

கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம்! – காங்கிரஸ் எம்.பிக்களை நீக்கிய சபாநாயகர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்களை சபாநாயகர் நீக்கியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது முதலாகவே கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி போன்றவற்றை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை குறித்து மக்களவை சபாநாயகரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

அதன் காரணமாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ் மற்றும் டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 எம்.பிக்களை மழைகால கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.