ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 3 மே 2020 (10:02 IST)

கொரோனாவுக்கு பலியான முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் உலகிலுள்ள மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை, பாமரர் முதல் பதவியில் இருப்போர் அவரை அனைவரையும் பாகுபாடு இன்றி இந்த வைரஸ் தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பல உயர் பதவியில் உள்ளவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வெளிவந்த செய்தியை பார்த்து வரும் நிலையில் தற்போது முன்னாள் உயர்நீதிமன்ற  நீதிபதி ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய்குமார் திரிபாதி என்பவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இவர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு அதனால் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது அம்மாநிலத்தில் உள்ள மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனை அடுத்து அந்த நீதிபதி குடும்பத்தார் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது