1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (11:54 IST)

ஜனநாயக நெறிகளைக் கடைபிடித்து நல்லாட்சி தருக.! புதிய அரசுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து..!!

Chidambaram
நாடாளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைபிடித்து நல்லாட்சி வழங்க வேண்டும் என  பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி நேற்று  பதவியேற்றுக் கொண்டார்.
 
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமராக பொறுப்பேற்ற மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அதன்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில், இந்தியக் குடிமகன் என்ற முறையில் நேற்றுப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஒன்றிய அரசுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைபிடித்து நல்லாட்சி தருக என சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.