செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (15:11 IST)

ரூ.1.3 லட்சத்திற்கு பழைய லேப்டாப்பை வழங்கிய Flipkart

Flipkart
இந்தியாவைச் சேர்ந்த பிளிப்கார்டு நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.1.3 லட்சத்திற்கு பழைய லேப்டாப்பை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை தலைமையிலான கொண்டு செயல்படும் முன்னணி நிறுவனம்  flipkart.இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை வலைதளமாக செயல்படும் பிளிப்கார்டு நிறுவனத்திற்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த   நிலையில், பிளிப்கார்ட் -ல் ரூ.1.3 லட்சத்திற்கு பழைய லேப்டாப் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மும்பையைச் சேர்ந்த சவுரோ முகர்ஜி பிலிப்கார்ட் வலைதளத்தில் ரூ.1.3 லட்சத்திற்கு  ஒரு புதிய லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் அவருக்கு  தூசி படிந்த பழைய தூசி படிந்த லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் எக்ஸ் தளத்தில் புகார் அளித்த நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்த பிளிப்கார்டு நிறுவனம், உடனடியாக இதைச் சரிசெய்வதாக தெரிவித்துள்ளது.