தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது? – தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
- 24 மணி நேரத்தில் கொடிகள், பேனர்கள் அகற்றம்! – சென்னை மாநகராட்சி உத்தரவு
- 5 மாநிலங்கள், 824 தொகுதிகள்; 2.7 லட்சம் வாக்குச்சாவடிகள்! – பரபரக்கும் மாநில தேர்தல்!
- சக்ரா படத்துக்கு சன் தொலைக்காட்சி கொடுத்த ஆஃபர்…தட்டிக்கழித்த விஷால் இப்போது வருத்தம்!
- தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: சுனில் அரோரா
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி குறித்த முழு விபரங்கள்!
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி குறித்த முழு விபரங்கள்!
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டது என்பதும் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மற்ற நான்கு மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை பார்ப்போம்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 27 ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் அசாமில் தேர்தல் நடைபெறும்
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும்
அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என்றும் அன்று மாலையே கிட்டத்தட்ட முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
