1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (09:58 IST)

ரூ.65,250 கோடி கருப்புப் பணம் மீட்பு: அருண் ஜெட்லி தகவல்

ரூ.65,250 கோடி கருப்புப் பணம் மீட்பு: அருண் ஜெட்லி தகவல்

கணக்கில் காட்டப்படாத கருப்புப்பணத்தை தானாக முன் வந்து வெளிப்படுத்தும் திட்டத்தின் (ஐடிஎஸ்) கீழ் இதுவரை ரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் வெளிவந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


 

 
இந்த திட்டத்தை மத்திய அரசு 4 மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. மேலும், கருப்பு பணம் குறித்த விவரங்களை வெளியிட கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதிதான் கடைசி நாள் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த திட்டத்திற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
 
“ஐடிஎஸ் திட்டத்தி கீழ் 64,275 பேர் கணக்கில் வராத தங்களது வருவாய் மற்றும் சொத்துகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றின் மதிப்பு 65,250 கோடி ஆகும். இதில், 45 சதவீதம் வரியாகவும், அபராதமாகவும் அரசுக்கு செல்கிறது. இந்த நிதி மக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.