1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 26 ஆகஸ்ட் 2020 (15:33 IST)

அரியருக்கு அப்ளை செய்திருந்தால் தேர்வு எழுத விலக்கு ! – முதல்வர் பழனிசாமி

கல்லூரி இறுதித் தேர்வு தவிரஃ பருவப் பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துளார்.

கொரொனா வைரத் தொற்று காரணமகா கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யுமாறு பலரும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் யுஜிசி கல்லூரி இறுதித் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதில் முகவும் பிடிவாதமாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கல்லூரி இறுதித் தேர்வு தவிர பிற பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து எனவும்,  கட்டணம்செலுத்திக் காத்திருக்கும் மாணவர்கள் யுசிசி, எஐசிடீ வழிக்காட்டுதலின் படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் உயர்மட்டக் குழிவின் அடிப்படையில்  இந்த முடிவு எடுக்கபப்டதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரியருக்கு அப்ளை செய்திருந்தால் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்படும்  என  முதல்வர் தெரிவித்துள்ளார்.