செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (12:26 IST)

புடவை கட்டி போராட்டம்: டெல்லியில் பரபரப்பு!!

தமிழக விவசாயிகள் 32 வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 
 
தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அந்த வகையில் விவசாயிகள் இன்று பெண் வேடமிட்டு போராடி வருகின்றனர். இன்னும் என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
 
மேலும், 7000 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் வரை போராடுவோம் என்றும் கூறியுள்ளனர். பிரதமர் அலுவலகம் நோக்கி போராட செல்லக் கூடாது என்றும் அப்படி சென்றால் கைது செய்வோம் என்றும் டெல்லி போலீசார் விவாசயிகளை மிரட்டியுள்ளனர். இதனால் அங்கு ஜந்தர் மந்திர் பகுதி பரபரப்பாய் காணப்படுகிறது.