திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (17:24 IST)

வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்: விவசாயிகளின் இறுதி எச்சரிக்கை!

மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு இதுவரை எட்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்திவிட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர் 
என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறும் வாய்ப்பே இல்லை என மத்திய வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் போராட்டம் மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தில் ’வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்’ என்ற வாசகம் கொண்ட பதாகையை விவசாயிகள் வைத்துள்ளனர். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உள்ள விவசாய பிரதிநிதிகளின் மேஜையில் உள்ள இந்த வாசகத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால் விவசாயிகள் விபரீதமான முடிவை எடுப்பார்களோ என்ற அச்சத்தையே இந்த பதாகையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.