1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (11:38 IST)

இறந்தவரை உயிர்ப்பிப்பதாக 11 நாட்கள் பிரார்த்தனை செய்த மதபோதகர். போலீசார் கண்டிப்பு

மும்பையை சேர்ந்த மதபோதகர் ஒருவரின் 17 வயது மகன் சமீபத்தில் திடீரென மரணம் அடைந்தார். ஆனால் மரணம் அடைந்த மகனை தகனம் செய்யாமல் அவனை உயிர்ப்பிக்க வைப்பேன் என்று கூறி அந்த மதபோதகர் தேவாலயத்தில் வைத்து 11 நாட்கள் பிரார்த்தனை செய்தார். அப்படியும் அவரது மகன் உயிர்த்தெழவில்லை



 
 
இந்த நிலையில் இதுகுறித்து தாமதமாக தகவல் அறிந்த மும்பை போலீசார் மதபோதகரின் தேவாலயத்திற்கு சென்று அவரை கண்டித்தனர். பின்னர் இறந்த மகனை தகனம் செய்ய அவர் ஒப்புக்கொண்டார்.
 
மூட நம்பிக்கையின் உச்சமாக நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்த போதிலும் மதபோதகர் மீது எந்தவித வழக்கையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.