ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (17:01 IST)

சூப்பர் சானிக் விமானத்தின் வால் பகுதியில் இருந்த அனுமனின் புகைப்படம் நீக்கம்!

bangalore
கர்நாடக மாநில  தலைநகர் பெங்களூரில் சர்வதேச விமான கண்காட்சி நடந்து வரும் நிலையில், ஒரு விமானத்தின் வால் பகுதியில்  அனுமனின் உருவப்படம் இருந்தது விமர்சனம் ஆகியுள்ளதால் அது நீக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பெங்களூரில் ஏரோ இந்தியா2023  என்ற தலைப்பில், சர்வதேச விமானக் கண்காட்சி   நேற்று முதல் தொடங்கியுள்ளது, இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

ஆசியாவில் 14 வது விமானக் கண்காட்சியில் , 100 நாடுகள் கலந்துகொண்டுள்ளன.  இந்த நிகழ்ச்சியில், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டர் சார்பில் எச்.எல்.எல். டி 42 என்ற சூப்பர் சானிக் விமானம் இருந்தது.

இதன் வால் பகுதியில், கடவுள் அனுமனின் உருவப்படம் இருந்த நிலையில், அதன் அருகில் புயல் வருகிறது என்ற வாசமும் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்த புகைப்படங்களை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோதி தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். போர் விமானத்தில் கடவுள் அனுமன் படம் இருப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

இதையடுத்து, விமான நிறுவனம் அந்தப் புகைப்படங்களை நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.