1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 மே 2021 (16:40 IST)

1000 க்கும் கீழே குறைந்த டெல்லி தினசரி பாதிப்பு!

டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழே குறைந்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் தொற்றால் 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது அலை ஆரம்பித்ததில் முதல் முறையாக பாதிப்பு எண்ணிக்கை 1000க்கும் கீழ் வந்துள்ளது. அங்கு ஆறு வாரங்களுக்கு மேலாக டில்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இது சம்மந்தமாகப் பேசியுள்ள அரவிந்த கெஜ்ரிவால் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சொல்லியுள்ளார். மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.