1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 14 மே 2018 (15:41 IST)

பிரதமரை கண்டிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய மன்மோகன் சிங்

பிரதமர் மோடி காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்களை தரக்குறைவாக பேசியதால் அவரை கண்டியுங்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மொகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 
கர்நாடக மாநில தேர்தல் பெரும் பரபரப்புடன் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் ஒருவரைக்கொருவர் மாறி மாறி கடுமையாக விமர்சித்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். 
 
இந்த சம்பவம் அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மோடிக்கு சமூக வலைதளங்களிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அதில், பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை தரக்குறைவாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசி வருகிறார். இது ஒரு பிரதமருக்கு அழகல்ல. அவரை கண்டியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.