ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (17:53 IST)

இதென்னடா சோதனை... வாடகைக்கு வீடு தேடும் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவால் சந்திரபாபு நாயுடு வாடகை வீடு தேடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 
 
ஆந்திர முதல்வராக் அஜெகன் மொகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து மக்களுக்கு தேர்தலில்ன் போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதேபோல் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். 
 
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு முற்றிலும் குறைக்கப்பட்டது. சந்திரபாபு நாயுடுவுக்கும், லோகேஷூக்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பும் பாதியாக குறைக்கப்பட்டது.  
அவர் ஆட்சி காலத்தில் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கபட்டது. தற்போது கிருஷ்ணா நதிக்கரையையில் 100 மீட்டருக்குள் கட்டிடங்கள் கட்டுவது சட்டவிரோதம் என்று அந்த எல்லைக்குள் உள்ள கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 
 
அதில் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடும் அடக்கம். எனவே, சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் குடிபெயற உள்ளார். இதற்காக விஜயவாடா அல்லது குண்டூரில் வாடகை வீடு தேடும் பணியில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.