திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (12:23 IST)

மீண்டும் வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! – பள்ளி மாணவன் பரிதாப பலி!

accident
மகாராஷ்டிராவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் செய்தபோது பேட்டரி வெடித்ததில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அன்றாட போக்குவரத்து பயன்பாடுகளுக்கு மின்சார வாகனங்களை பயன்படுத்த விருப்பம் காட்டுகின்றனர். இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை சமீப காலத்தில் அதிகரித்துள்ளது.

ஆனால் அதே சமயம் சில இடங்களில் மின்சார ஸ்கூட்டர்கள் சார்ஜ் செய்யும்போது வெடிக்கும் சம்பவங்கள் மக்களிடையே மின்சார வாகனங்கள் குறித்த பீதியையும் உண்டாக்கி வருகின்றன.


மகாராஷ்டிராவின் பல்கார் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் ஷபிர் அன்சாரி. இவரது தந்தை வைத்திருந்த மின்சார ஸ்கூட்டருக்கு ஷபிர் சார்ஜ் போட்டபோது திடீரென பேட்டரி வெடித்தது. இதில் சிறுவன் ஷபிர் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். ஷபிரின் பாட்டிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டபோது ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K