வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (11:28 IST)

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

rain
இந்தியாவில் இரண்டு விதமான பருவ மழைகள் பெய்யும் என்பதும் ஒன்று வடகிழக்கு பருவமழை மற்றொன்று தென்கிழக்கு பருவமழை என்பதும் தெரிந்ததே 
 
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும் நிலையில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது
 
இந்தியாவில் அக்டோபர் 20ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆண்டு இயல்பைவிட தென்மேற்கு பருவமழை 45 சதவீதம் அதிகமாக மழை பெய்த நிலையில் வடகிழக்கு பருவமழையும் அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே அக்டோபர் 15ஆம் தேதிக்கு பின்னர் வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அக்டோபர் 20ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Edited by Mahendran