1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (13:17 IST)

மும்பையில் மின்சார பேருந்து சேவை தொடக்கம்

முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் 6 பஸ் பேருந்து சேவை மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தின் கோல்டுஸ்டோன் குரூப் மற்றும் சீனாவின் பி.ஒய்.டி வாகன தயாரிப்பு நிறுவனம் இணைந்து 6 இ-பஸ் கே7 மின்சார ரக  பேருந்துகளை மும்பை நகரத்திற்கு வழங்கியுள்ளது.

 
இந்தியாவில் தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு  விதித்துள்ளது. எதிர்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் மட்டுமே விறக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இதையொட்டி மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பெஸ்ட் குழுமம் மின்சார பஸ் சேவையை தொடங்கி உள்ளது.
 
நேற்று இந்த பஸ்களின் சேவை வடலா பணிமனையில் துவக்கி வைக்கப்பட்டது. இதனை மும்பை மேயர் விஸ்வநாத்  மகாதேஷ்வர் முன்னிலையில் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே சேவையை துவக்கி வைத்தார். அந்த பேருந்தில் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 200கி.மீ வரை இந்த மின்சார பேருந்துகளால் செல்ல முடியும் என அதை தயாரித்த நிறுவனம்  தகவல் தெரிவித்துள்ளது. சாலைகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இந்த பேருந்துகளை இயக்க முடியும் என  தெரிவித்துள்ளனர். 
 
பேருந்தில் பயணம் செய்வோருக்கு இந்த மின்சார பஸ்கள் மிகுந்த சவுகரியத்தையும் புதிய அனுபவத்தையும் அளிக்கும் என  பயணிகள் கூறி உள்ளனர்.