செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (09:05 IST)

அதிகரிக்கும் காற்று மாசுபாடு – வந்துவிட்டது எலக்ட்ரிக் ஆட்டோ !

இந்தியாவில் அதிகமாகி வரும் காற்று மாசைக் குறைக்கும் விதமாக எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி, சென்னை, ஹைதராபாத் போன்ற இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சமீபத்தில் டெல்லியில் சுத்தமான காற்றை விற்குமளவுக்கு சூழ்நிலை மோசமாக போனது. இந்த காற்று மாசுபாட்டுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது வாகனங்களால் வெளியிடப்படும் புகைதான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் பொருட்டு எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இரு சக்கர வாகனங்களை அடுத்து இப்போது ஹைதராபாத்தில் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பயணிக்கும் வாடிக்கையாளர்களிடம் பயணம் செய்திருக்கும் கிலோமீட்டரைப் பொறுத்து கட்டணம் வசூலிப்பதோடு, அவர்களால் எவ்வளவு காற்று மாசுபாடு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் துண்டு சீட்டு ஒன்றும் கொடுக்கப்படுகிறது.