1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (16:28 IST)

9 மாநிலங்களில் செப்டம்பர் 3ஆம் தேதி தேர்தல்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Election Commision
காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் 233 பேர் தேர்தல் மூலமும், 12 பேர் நியமன பதவி மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும்.   
 
இந்நிலையில்  பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 
 
இதன் காரணமாக அசாம், ஒடிசா, பிகார், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 12 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன.
 
இந்த நிலையில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி நிறைவடையும் என்றும் வேட்புமனு பரிசீலனை 22-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
12 மாநிலங்களவை தொகுதிக்கும் தனித்தனியாக செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.