வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்?
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்திய வீரர்கள் வீராங்கனைகளும் சில பதக்கங்களை பெற்று வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் அபாரமாக விளையாடி கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்த வெற்றியை நாடே கொண்டாடி வந்த நிலையில் திடீரென அவர் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி நீர் சேர்த்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு முழுவதுமாக தூங்காமல் பயிற்சி மேற்கொண்டதால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran