1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (12:13 IST)

பாஜக 350, காங்கிரஸ் 43 தொகுதிகளில் வெற்றி.. இது என்ன புது கருத்துக்கணிப்பா இருக்குது..!

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 350 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில ஊடகங்கள் 200 முதல் 220 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு கிடைக்கும் என்று தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பலோடி சாட்டா பஜார் ஒரு சூதாட்ட நகரமாகவே கூறப்படுகிறது. இங்கு  கணிக்கப்படும் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் சரியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
கிரிக்கெட் உள்பட பல விளையாட்டுக்கள் மற்றும் அரசியல் சூதாட்டம் நடக்கும் இடம் என்று கூறப்படும் இந்நகரைல் தற்போது தேர்தல் முடிவுகள் குறித்த சூதாட்டம் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது 
 
அந்த வகையில் பலோடி சாட்டா பஜாரில்  சமீபத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 300 முதல் 333 இடங்களை வெல்லும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 41 முதல் 43 இடங்களே கிடைக்கும் என்றும் சூதாட்டம் நடத்தப்படுகிறதா.
 
மேலும் பாஜக 350 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி ஒரு ரூபாய் பந்தயம் கட்டினால் 3 ரூபாய் தருவதாகவும் 400 இடங்களை பிடிக்கும் என்று கூறி கட்டப்படும் தொகைக்கு 12 முதல் 15 ரூபாய் தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்று கூறி பணம் காட்டினால் 4 மடங்கு பணம் தருவதாகவும் கூறப்படுகிறதாம். இந்த நிலையில் பாஜக 350 இடங்களில் வெற்றி பெறும் என்று பலர் பணம் கட்டி வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran