ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (08:06 IST)

வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை: தேர்தல் ஆணையம்

voter id aadhar
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் இதனால் கள்ள வாக்குகள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
இந்த நிலையில் தற்போது திடீரென வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்றும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என வாக்குச்சாவடி அலுவலர்கள் பொது மக்களை எச்சரிக்கும் சம்பவம் தொடர்ந்து வருவதால் இந்த நிலை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது
 
ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள எண் இணைப்பது கட்டாயம் இல்லை என்றால் இதை இணைப்பதற்கு யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் எனவே இந்தத் திட்டமே பாதிக்கப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.