ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜூலை 2022 (22:51 IST)

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு....தேர்தல் ஆணையம் முக்கிய திட்டம் !

விரைவில் டிஜிட்டல் வாக்காளர் அட்டை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆ தேதி வரை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆதார் எண்ணை இணைக்க வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைத்துச் சட்டசபை தொகுதியிலும் 100% விபரங்களை இதில் இணைக்க திட்டமிட்ப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று,  அலுவலர் ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்ரு விவரங்கள் சேகரிப்பார் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.