வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:54 IST)

பெண் செய்தியாளரின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

பெண் செய்தியாளரின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!
பெண் செய்தியாளர் வங்கிக் கணக்கில் உள்ள கோடிக்கணக்கான பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாகவும் அவரது பெயரில் உள்ள சொத்துக்களை முடக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வாஷிங்டன் போஸ்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் ரானா அயூப். இவரது வங்கி கணக்கில் உள்ள 1.77 கோடி ரூபாய் ரூபாயை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். மேலும் அவரது பெயரில் உள்ள சொத்துக்களை முடக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
என்.ஜி.ஓக்கள் அளித்த பணத்தை செய்தியாளர் ரானா அயுப் தனது சொந்த கணக்கிலும் தனது உறவினர்களையும் வரவு வைத்துக் கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது