1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (11:35 IST)

அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் பகிரங்க சவால்!!

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பாக குற்றம் சாட்டும் அரசியல் கட்சி தலைவர்கள் அதை நிரூபிக்க முடியுமா என தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது. 


 
 
இந்திய தேர்தல்களில் வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வாக்குகள் விழும்படி தொழில்நுட்ப மோசடி நடந்திருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. 
 
இந்த ஆண்டு இத்தகைய குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாமல் மின்னணு எந்திரங்களை ஒழித்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் தேர்தல் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக கட்சிகள் நிரூபிக்க 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம். 
 
10 நாட்களுக்குள் துறை சார் நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகளைக் கொண்டு இந்த மின்னணு எந்திரங்களைச் சோதனையிட்டு குற்றத்தை நிரூபித்துக் காட்டுங்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.