திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (07:47 IST)

பெண் வாடிக்கையாளர் முன் ஆபாச படம் பார்த்த கேப் டிரைவர்: திடுக்கிடும் புகார்

பெங்களூரில் தனியார் நிறுவனம் கேப் நிறுவனத்தின் டிரைவர் ஒருவர் பெண் வாடிக்கையாளர் காரின் உள்ளே இருக்கும்போது ஆபாச படம் பார்த்து கொண்டே வண்டி ஓட்டியதாக அந்த பெண் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த டிரைவர் பார்த்து கொண்டிருந்த ஆபாச படம் பின்னால் உட்கார்ந்திருந்த அந்த பெண்ணுக்கும் தெரிந்ததால் அவர் அருவருப்புடன் நெளிந்தார். ஆபாச படத்தை நிறுத்துமாறு டிரைவரிடம் அந்த பெண் கூறியும், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆபாச படம் பார்த்து கொண்டே இருந்தார் அந்த டிரைவர்
 
இதனையடுத்து உடனடியாக காரை நிறுத்த சொன்ன அந்த பெண் அருகில் உள்ள காவல்நிலையத்தில் டிரைவர் மீதும் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திலும் புகார் செய்தார்.
 
புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் டிரைவரை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த தனியார் நிறுவனம், டிரைவரின் உரிமத்தை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அந்த பெண்ணிடம் வருத்தம் தெரிவிக்கவும் செய்துள்ளது