புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 ஜூலை 2020 (10:35 IST)

90 ml + 2 Half Boil: கொரோனா மருந்து ரெடி செய்யும் காங். கவுன்சிலர்!

கொரோனா பாதிக்காமல் இருக்க 90 மில்லி ரம்மும் 2 ஹாஃப் பாயிலும் போதும் என காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 11 லட்சம் பாதிப்புகளை தாண்டி இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 11,18,043 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,497 ஆக உயர்ந்துள்ளது.  
 
இந்த சூழ்நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் கடுமையாக முயற்சித்து வருகின்றன. அதோடு மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 
 
இந்நிலையில், கர்நாடாகா மாநில மங்களூரு மாவட்டத்திற்குட்பட்ட உல்லால் பகுதி கவுன்சிலரான ரவிச்சந்திர காட்டி, கொரோனாவில் இருந்து மீள பல்வேறு மருந்துகளை முயற்சித்தேன். ஆனால், 90 மில்லி ரம்மும் 2 ஹாஃப் பாயில் அதற்கு தீர்வு தந்ததாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
 
இந்த வீடியோ வைரலான நிலையில் அம்மாநில காங்கிரஸ் விமர்சனத்திற்குள்ளாகியது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் மேலிடம் உறுதியளித்துள்ளது.