வேலை நேரத்தில் சிரிக்கக் கூடாதுங்கோ...போலீஸுக்கு உத்தரவு...
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்தியதொழில் பாதுகாப்பு படையினர் பணியின் போது சிரிக்க வேண்டாம் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பில் ஈடுபடும் சிரித்த முகத்துடன் இருக்கும் போது தளர்வான பாதுகாப்புக்கு வழிவகுத்திட வாய்ப்புள்ளதாக கருதி அவர்களை குறைவாக சிரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
பயணிகளிடம் எளிதில் பழகுவதால் தான் கடந்த முறை தாக்குதல் நடைபெற்றது என்று இந்த அமைப்பின் இயக்குனர் ஜெனரல் ராஜேஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதேபோல உடல் எடையை குறைக்காத போலீஸாரையும் பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.
இதுதவிர கடந்த 2004 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச போலீஸாருக்கு பெரிய மீசை வளர்க்க பணம் வழங்கப்பட்டது. முகத்தில் மீசை இருந்தால் கம்பீரத்துடன் தெரியலாம் என்பதே அதற்கான காரணமாகும்.