வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:35 IST)

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி: திக்விஜய் சிங் அறிவிப்பால் பரபரப்பு!

Dik vijay singh
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக ஏற்கனவே அசோக் மற்றும் சசிதரூர் ஆகியோர் கூறியிருக்கும் நிலையில் மூன்றாவது நபராக திக்விஜய் சிங் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சோனியா காந்தியின் ஆதரவு பெற்ற அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் போட்டியிட உள்ளார். ஆனால் அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால் அவர் போட்டியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது திடீரென திக்விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாகவும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார் 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இந்த மூவரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறும் தேர்தலின் முடிவில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.