சசிகலா குறித்த புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அனைத்தும் உண்மையே: டிஐஜி ரூபா அதிரடி பேட்டி!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 20 ஜூலை 2017 (11:38 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறையில் சகல வசதிகளை பெற்று சொகுசாக வாழ்ந்து வருகிறார் என தகவல்கள் வந்தவாறே உள்ளன.

 
 
சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வருவது, சுடிதார் அணிந்துகொண்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவது என வீடியோக்கள் மற்றும் சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
 
இந்நிலையில், சசிகலாவின் வண்டவாலத்தை வெளியே கொண்டு வந்த டிஐஜி ரூபா இது குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, சசிகலா சம்பந்தமாக வெளியாகிய புகைப்படங்கள் அனைத்தும் உண்மையே. சசிகலாவை பற்றி நான் மேலதிகாரிடம் பேச அனுமதி வழங்காததால் வேறு வழியின்றி நான் அறிக்கைவிட வேண்டியதாயிற்று. 
 
தற்போது அந்த அறிக்கை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. இப்பொழுது நான் அதை பற்றி பேசுவது சரியாகவும் இருக்காது. மேலும் சிறைக்கு சென்று ஆய்வு நடத்த எனக்கு யாரும் உத்தரவிடவில்லை. ஆனால், புகைப்படங்கள் அனைத்தும் உன்மையானவை என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :