வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (10:32 IST)

'இந்தி தெரியாது போடா' டி-ஷர்ட் அணிந்த கனடா பிரதமர்?

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதால் இப்போது இந்த டிஷர்ட்க்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 'இந்தி தெரியாது போடா' எனும் வாசகம் அடங்கிய டீ ஷர்ட் கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது.


ஆனால், உண்மையில் அவர் கையில் வைத்திருப்பதோ ட்ரூடோ தடுப்பு மருந்து குறித்து வாசகம் அடங்கிய டீ ஷர்ட். கடந்த மே 30, 2019-ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், தற்போது இந்த சமயத்திற்கு ஏற்றவாறு " இந்தி தெரியாது போடா" என மாற்றி போலியான புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.