செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 டிசம்பர் 2018 (22:22 IST)

நான் தான் நிதி ஒதுக்கினேன், எனக்கே அழைப்பு இல்லை: முன்னாள் பிரதமர் வேதனை

பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாம், அருணாச்சல பிரதேசம் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து போகிபீல் என்ற இடத்தில் 4.94 கி.மீ. நீளத்தில் இரண்டடுக்கு பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாலம் மற்றும் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த பால் 5900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாலத்தின் அடிக்கல் நாட்டு விழா முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமராக இருந்தபோது நடந்தது. அப்போதே இந்த பாலத்திற்கு அவர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன்பின் வாஜ்பாய் காலத்தில் புத்துயிர் பெற்று பல்வேறு தடைகளை உடைத்து தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த பாலம் திறக்கப்பட்டது குறித்து தேவகவுடா செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'நான் பிரதமராக இருந்தபோது அடிக்கல் நாட்டிய இந்த பாலத்துக்கு அப்போதே 100 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி இருந்தேன். ஆனால் இன்றைய திறப்பு விழாவில் என்னை மறந்துவிட்டார்கள். அம்மாநில மக்கள் கூட என்னை மறந்து விட்டார்கள் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது என்று கூறினார்.