இந்தியாவில் இரண்டாம் அலை தீவிரம்; டெல்டா வகைதான் காரணம்! – மருத்துவ நிபுணர்கள் தகவல்!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதற்கு டெல்டா வகை கொரோனா வைரஸே காரணம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்கள் முன்னதாக அதிகபட்சமாக தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை தாண்டிய நிலையில் தற்போது 2 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலை பாதிப்பை விட இரண்டாம் அலையில் பாதிப்புகள், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்புகள் அதிகரித்ததத்ற்கு வீரியமிக்க டெல்டா வகை கொரோனா தொற்றே காரணம் என மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் ஆல்பா வகை தொற்றை விட 50 சதவீதம் அதிக வீரியம் கொண்டதான டெல்டா வகை கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் அதிகமாக பரவியதாக கூறப்படுகிறது. பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் முந்தைய வைரஸான கப்பா 8 விழுக்காடும், டெல்டா 76 சதவீதமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.