1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (20:26 IST)

டெல்லி மாணவர்களிடையே திடீர் பிரிவு: குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கோஷம் போட்ட மாணவர்கள்

சமீபத்தில் மத்திய தாக்கல் செய்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் செய்த போது திடீரென வன்முறை வெடித்ததால் பல்கலைக்கழகத்துக்குள் போலீசார் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்
 
இந்த தாக்குதலுக்கு ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென போராட்டம் செய்து வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், டெல்லி போலீசாருக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது
 
ஒரே பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களில் ஒரு பிரிவினர் சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் இன்னொரு பிரிவினர் சீர்திருத்த சட்டத்தை ஆதரித்தும் கோஷம் எழுப்பி போராட்டம் செய்து வருவதால் மாணவர்கள் இடையே இரு பிரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது