புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (08:49 IST)

கொரோனா அச்சுறுத்தல் – பள்ளிகளுக்கு 27 நாட்கள் விடுமுறை !

டெல்லியில் பள்ளி விடுமுறை

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி சுமார் 50 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3000 என சீன அரசு அறிவித்துள்ளது.

ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இப்போது இந்தியாவில் இந்த வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு 27 நாட்கள் அதாவது மார்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேப் போல பயோ மெட்ரிக் முறைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கபப்ட்டுள்ளது. தொடுதல் மூலம் இந்த நோய் பரவும் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.