1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (09:40 IST)

டெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடால் ஆக்ஸிஜனை பாட்டில்களில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடால் மக்கள் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக அதிகரித்து வரும் காற்று மாசுபாடால் மக்கள் வெளியே செல்லவே யோசிக்கும் நிலையில், நல்ல காற்றை சுவாசிப்பதற்கான ’ஆக்ஸி ப்யூர்’ என்ற பெயரில் சில மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் மக்களுக்கு சுவாசிக்க தரப்படுகிறது. மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ் போன்ற 7 விதமான வாசனைகளில் கிடைக்கும் இந்த ஆக்ஸிஜனை சுவாசிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் எதிர்காலத்தில் காற்றையும் விலைக்கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.