தீர்ப்பு வரும்வரை பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம்! – உச்சநீதிமன்றம்!
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கேரளா அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு வழங்கிய நிலையில், மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட சிறிய அமர்வில் தொடங்கிய விசாரணையில் “பெண்கள் நுழைய சபரிமலையில் மட்டுமல்லாமல் பல்வேறு இந்து, இஸ்லாமிய மத கோவில்களிலும் தடை உள்ளது” என குறிப்பிட்டனர்.
எனினும் இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். 7 பேர் கொண்ட பெரிய அமர்வில் மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.