திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:44 IST)

விக்கிரவாண்டி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நிற்கக்கூடாது... அமைச்சர் உத்தரவு

bus
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் விக்கிரவாண்டி என்ற பகுதியில் உள்ள உணவகத்தில் நின்று செல்லும் 
 
பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அந்த உணவகத்தில் சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக அரசின் சுகாதாரத் துறையினர் சமீபத்தில் விக்ரவாண்டி உணவகத்தில் ஆய்வு செய்தனர்.
 
அப்போது அங்கு தரமற்ற உணவுகள் மற்றும் விலை அதிகமாக விற்க விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு பேருந்துகளை விக்கிரவாண்டி உணவகத்தில் நிற்க கூடாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva