மழை பெய்ததால் குறைந்தது காற்றின் மாசு.. டெல்லியில் வாகன கட்டுப்பாடு இல்லை..!
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் மாசு அதிகரித்ததன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக ஒற்றை பதிவெண் கொண்ட வாகனங்கள் மற்றும் இரட்டை பதிவு கொண்ட வாகனங்கள் இயக்கம் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் திடீரென மழை பெய்ததால் காற்றின் மாசு குறைந்துள்ளது. மழை காரணமாக காற்றின் தர குறியீடு மேம்பட்டு உள்ளதால் நவம்பர் 13 முதல் 20 வரை அமல்படுத்தப்பட்ட ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை பதிவெண் முறையிலான வாகன கட்டுப்பாடு விதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இதனால் டெல்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே டெல்லியில் செயற்கை மழை பெய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தற்போது இயற்கையாகவே மழை பெய்து காற்றின் மாசுவை குறைத்து உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Mahendran